யாழில் (Jaffna) பத்து வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய 62 முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை காவல் பிரிவிற்குட்பட்ட வேலணை துறையூர் பகுதியில்
குறித்த சம்பவம் இன்றையதினம் ( 25) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை (19) அன்று குறித்த சிறுமி துறையூர் கடற்றொழில்
சங்கத்திற்கு அயலில் உள்ள கடைக்கு யூஸ் வாங்கச் சென்றுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்
கடையின் உரிமையாளரான 62 வயது மதிக்கத்தக்க நபர் குறித்த சிறுமியை கடையின்
உள்ளே அழைத்து குளிரூட்டியினுள் இருக்கும் “யூசை” எடுக்குமாறு சிறுமிக்கு
தெரிவித்துள்ளார்.
சிறுமி “யூசை” எடுக்க முற்பட்டபோது குறித்த கடையின் உரிமையாளரான சந்தேக நபர்
சிறுமியை பின்புறமாக கட்டி அணைத்து கடுமையாக
பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதையடுத்து பதற்றத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி வீடு சென்று குறித்த சம்பவத்தை
தாயாருக்கு தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தாயார் தனது சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சி காவல்துறையில்
முறைப்பாடு செய்ய தயங்கியுள்ளார்.
அலுவலகத்தில் முறைப்பாடு
இருந்தும் சில சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால் சிறுமியின் தாயார் கடந்த 23
ஆம் திகதியன்று தனது பகுதி கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, 24 ஆம்
திகதியன்று வேலணை பிரதேச செயலகத்திலுள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டு ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் அன்றையதினமே
முறைப்பாடு செய்யப்பட்டது.
பின்பு, குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கையில் இறங்கி, கடையின்
உரிமையாளரை இன்று (25) பிற்பகல் கைதுசெய்துள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர்
தெரிவித்தனர்.
மேலும், குற்றவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.