யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் ஒருவர்
நேற்றையதினம் (17) உயிரிழந்துள்ளார். அளவெட்டி மத்தி, அளவெட்டி பகுதியைச்
சேர்ந்த செல்லையன் முருகேசு (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
இவர் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அளவெட்டி
வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் காய்ச்சல்
குணமடையவில்லை.
திடீரென நெஞ்சு வலி
பின்னர் நேற்றையதினம் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில்
தெல்லிப்பளை ஆதர வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை
பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

