முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்தளத்தில் அதிகரித்த காட்டு யானைகளின் அட்டகாசம்

புத்தளம் (Puttalam) மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட கோம்பகஸ்வெவ கிராமத்தில் காட்டு யானையொன்று வீடொன்றினை சேதப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பி.எம்.சஞ்சீவ என்பவரின் வீட்டையே இவ்வாறு காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

காட்டு யானை

பெரும் சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டின் முன் பகுதியை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அந்த வீட்டில் வரவேற்பறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு நெல்மூடைகளை இழுத்துச் சென்றுள்ளது.

புத்தளத்தில் அதிகரித்த காட்டு யானைகளின் அட்டகாசம் | Elephant Breaks Into House In Puttalam

மேலும், அங்கு இருந்த தென்னை மரங்களுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த யானை வீட்டை உடைக்க ஆரம்பித்த போது அந்த வீட்டில் தானும், தனது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், பெரும் சத்தத்துடன் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதற்கு அந்த யானை முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வீட்டுக்குள் இருந்து கூக்குரலிட்ட போது கிராமத்திலுள்ள அயலவர்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் காட்டு யானையை துரத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனித உயிரிழப்புகள்

மேலும், தனது வீடு கடந்த வருடமும் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், தனது வீட்டை திருத்தியமைக்க அப்போது 2 இலட்சம் ரூபா வரை செலவு செய்ததாகவும் ஆனால், நஷ்டஈடாக 12,500 ரூபா மாத்திரமே தமக்கு கிடைத்ததாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் அதிகரித்த காட்டு யானைகளின் அட்டகாசம் | Elephant Breaks Into House In Puttalam

இதேவேளை, பொதுமக்களுக்கும் யானைக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் போராட்டத்தால் பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு இரவுகளிலும் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை காணப்படுவதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.