கேகாலை, ருவன்வெல்லவில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின் யானை ஒன்று மதம் பிடித்ததில் குழப்பம் விளைவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம்(19.07.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த ஊர்வலம் யடன்வல ஸ்ரீ விஷ்ணு கோயிலின் எசல பெரஹெரா என்று அழைக்கப்படுகிறது.
தடைப்பட்ட ஊர்வலம்
இந்த சம்பவத்தில் ஊர்வலம் சிறிது நேரம் தடைப்பட்டதோடு, அங்கிருந்த மக்களையும் யானை துரத்தியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.