அம்பாறையின், தெம்பிட்டிய-மஹாஓயா வீதியில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டதால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு கடுமையான ஆபத்து
காட்டு யானை ஒன்று உள்ளூரில் தயாரிக்கப்பட்ட “ஹக்கா பட்டாஸ்” என்ற வெடிபொருளால் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும், அம்பாறை கால்நடை மருத்துவ பிரிவு சிகிச்சை அளித்து வருவதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரி கித்சிரிமேவன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த யானை, வீதியில் அடிக்கடி செல்வதால் மக்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும் என்பதை கருதியே வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்துள்ள யானையை பட்டாசுகளை வெடித்து விரட்ட முயன்றபோதும் பலனில்லை என்று அதிகாரி கூறியுள்ளார்.