மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி கடுகதி தொடருந்தில் மோதி யானை ஒன்று பலத்த காயமடைந்துள்ளது.
குறித்த சம்பமானது இன்று (3) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த தொடருந்தானது காலை 08.35 மணியளவில் மன்னம்பிட்டி மற்றும் கல்லல தொடருந்து நிலையத்திற்கிடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த போது யானையுடன் மோதியுள்ளது.
சிகிச்சை
இதனையடுத்து, வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டு மருத்துவக்
குழு ஒன்று யானைக்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது.
தொடருந்தில் யானை
மோதுண்டதால் தொடருந்து பயணம் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாகிய பின்னரே மீண்டும்
கொழும்புக்கு தனது பயணத்தை தொடர்ந்தது.
சுற்றுலாத்துறையை கவர்கின்ற இந்த யானைகள் மட்டக்களப்பு பிரதான புகை இருந்த
பாதையில் மோதுகின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதனால் இதற்கான ஒரு
நிரந்தர தீர்வினை அரசாங்கம் விரைவாக காண வேண்டிய தேவை எழுந்துள்ளது என
சுற்றாடல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.