முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு – டுபாய் இடையான விமான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ்

எமிரேட்ஸ் (Emirates) விமான சேவை, கொழும்பு (Colombo) மற்றும் டுபாய் (Dubai) இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் மேலதிக திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  விமானமானது EK654/655 ஆகச் செயற்படுவதுடன், அதன் இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிப்பதுடன் அந்த விமானத்தில் 360 பயணிகளுக்கு இடமளிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கு இது உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் 

மேலதிக விமான சேவையானது 2025 மார்ச் 31 வரையான காலப்பகுதியில் வாரத்தில் ஆறு முறை செயற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

EK654 என்ற விமானம் டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) உள்ளூர் நேரப்படி காலை 10:05 மணிக்கு (புதன் கிழமைகள் தவிர) புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும்.

கொழும்பு - டுபாய் இடையான விமான சேவையை அதிகரித்த எமிரேட்ஸ் | Emirates Increases Service To Sri Lanka To Dubai

EK655 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து (BIA) இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, டுபாய் விமான நிலையத்தை அடுத்த நாள் அதிகாலை 1.05 மணிக்கு சென்றடையும்.

2025 ஏப்ரல் 1 முதல், புதன்கிழமைகளில் ஏழாவது வாராந்த விமானம் சேவையில் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் தற்போது கொழும்பு மற்றும் டுபாய் இடையே இரண்டு நேரடி சேவைகளையும், மாலைதீவு (Maldives) வழியாக மூன்றாவது தினசரி சேவையையும் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.