ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) உறுப்பினர்களாக உள்ளவர்கள் 10 ஆண்டுகளின் பின்னர் இரண்டாவது தடவையாகவும் 30 சதவீத நன்மையை பெற விண்ணப்பிக்க முடியாத நெருக்கடி நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் தரவுகள் இன்னும் புதுப்பிக்கப்படாமையினால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்திற்கமைய, முதலாவது முறையாக 30 சதவீத சலுகையை பெற்ற பின்னர், 10 ஆண்டுகள் கடந்தவுடன் மீண்டும் அதே சதவீத நன்மைக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு.
தொழிலாளர் அலுவலகங்கள்
ஆனால், தற்போதைய சூழலில் தொழிலாளர் அலுவலகங்கள் பலர் விண்ணப்பங்களை ஏற்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன.
மத்திய வங்கி தரவுகளை புதுப்பித்த பிறகு மட்டுமே செயல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை பயனாளிகள் காத்திருக்க வேண்டும் எனவும் தொழிலாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பலர் சட்டப்படி தாங்கள் பெறக்கூடிய நன்மையை விரைவில் பெற முடியாமை தொடர்பில் கவலையடைந்துள்ளனர்.
மத்திய வங்கி நடவடிக்கை
முன்னதாக திட்டமிட்ட செலவுகளுக்காக இந்த தொகையை எதிர்பார்த்திருந்தவர்கள், இந்த தாமதத்தால் நெருக்கடி நிலைமைக்குள்ளாகியுள்ளனர்.
“சட்டம் தெளிவாக 30 சதவீத நன்மையை இரண்டாவது முறையாக பெற விண்ணப்பிக்கலாம் எனக் கூறுகிறது.
இவ்வாறான நிலையில் தரவுகளை விரைவில் புதுப்பிக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.