ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிப்பது நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 115 பில்லியன் ரூபா பயனாளிகளின் கணக்குகளில் சேர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம் பயனாளிகளுக்கு நீதி கிடைத்துள்ளதில் தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை
EPF உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி
இதன் ஊடாக சுமார் 27 இலட்சத்திற்கும் அதிக ஊழியர்களின் சேமலாப நிதியம் இந்த வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பல நன்மைகளை பெற்றுத்தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் குழு 31.12.2023 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் மீதிக்கு 13 சதவீத வட்டி விகிதத்தை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது” என மத்தியவங்கி அறிவித்துள்ளது.
இதற்கிடையில், 31 டிசம்பர் 2023 இன் படி EPF உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி விகிதமாக 13% விண்ணப்பிப்பதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரதான பாதாள உலகக்கும்பலின் உறுப்பினர் கைது
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |