முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கிளம்பிய கடும் எதிர்ப்பு

அயர்லாந்து (Ireland) நாட்டில் புலம்பெயர்தலுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அயர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டில் பேரணிகளில் வன்முறை மற்றும் அதைத் தடுக்கக் குவிக்கப்படும் காவல்துறையினர் என கலவரம் வெடிக்கும் அபாயம் உருவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அகதி நிலை 

அயர்லாந்தில், புகலிடம் மற்றும் அகதி நிலை கோரி ஆப்பிரிக்கா (Africa), மத்திய கிழக்கு நாடுகள் முதலான நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் எண்ணிக்கை சுமார் 33,000 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கிளம்பிய கடும் எதிர்ப்பு | European Country Has Protested Against Immigrants

உக்ரைன் அகதிகள் எண்ணிக்கை, 100,000 எனவும் 2023 மற்றும் 2024 காலகட்டத்தில் அயர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 150,000 எனவும் புள்ளி விவங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் நாளொன்றிற்கு ஆகும் செலவு 70 பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் புலம்பெயர்தலுக்கு எதிராக திரும்பத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்ப்பு பேரணிகள் 

தலைநகர் டப்ளினில் புலம்பெயர்தல் எதிர்ப்பு பேரணிகள் வன்முறையில் முடிந்துள்ளன.

பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு முதலான வன்முறை சம்பவங்களுடன் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கிளம்பிய கடும் எதிர்ப்பு | European Country Has Protested Against Immigrants

Coolock என்னுமிடத்தில், பேரணியில் கலந்துகொண்டவர்கள் காவல்துறையினருடன் மோத கலவரம் வெடித்துள்ளது.

மேலும், புலம்பெயர்தல் எதிர்ப்பு காரணமாக அயர்லாந்தில் அமைதியின்மை உருவாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.