மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி ஆணைக்குழுவின் பொருத்தமான முன்மொழிவை பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின்னர், மின் கட்டண குறைப்பு சதவீதத்தை அறிவிக்கும் என்று சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சபை சமர்ப்பித்துள்ள மூன்றாவது சந்தர்ப்பமும் இதுவாகும்.
இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.