முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எமது ஆட்சியில் அனைவரது உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படும் : அனுர குமார தெரிவிப்பு

நாட்டின் தொழிற்சங்கத்தினர், கல்வியியலாளர்கள், பல்துறை சார்ந்தவர்கள் என அனைவரினதும் உரிமைகளுக்கு எமது ஆட்சியில் மதிப்பளிக்கப்படும்.

அதற்கான சூழல் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (29) காலை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே  இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை

குறித்த அறிக்கையில், “சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் ஒரு நாட்டினை முன்னேற்ற முடியும்.

எமது ஆட்சியில் அனைவரது உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படும் : அனுர குமார தெரிவிப்பு | Everyone Rights Respected Government Anura

இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே எமது கொள்கையின் மிக முக்கியமான நோக்கமாகும்.

இந்நிலையில், சட்டமா அதிபரின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

எனினும் ஜனாதிபதியின் இந்த கோரிக்கை அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் ஜனாதிபதி சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு பணிப்புரை வழங்கினார்.

சட்டமா அதிபரின் பதவிக்காலம்

ஒரு சில தேவைகளை கருதியே ஜனாதிபதி அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

எமது ஆட்சியில் அனைவரது உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படும் : அனுர குமார தெரிவிப்பு | Everyone Rights Respected Government Anura

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டதை ஜனாதிபதி மீறி செயற்படுகின்றார். சட்டமா அதிபரின் பதவிக்காலம் நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்துள்ளது.

மேலும், அனைத்து விடயங்களையும் தமது அதிகாரத்தின் கீழ் செயற்படுத்தவே அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்