800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு (Mervyn Silva) எதிராக கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் ஆதித்யா படபெந்திகே (Aditya Patabendige) முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிணையில் விடுதலை
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலியான பத்திரங்களைப் பயன்படுத்தி விற்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

