முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: சந்தேக நபர்கள் கைது

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் நகரம் மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபரும் ஆறு ஆசிரியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரியருகையில், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் கடந்த 15 நடைபெற்றது.

சந்தேக நபர்கள் கைது

இந்நிலையில், அநுராதபுர (Anuradhapura) பகுதியொன்றின்  பாடசாலையின் பரீட்சை மையத்திற்குள் சென்ற பாடசாலை அதிபர் ஒருவர் பரீட்சையின் முதலாம் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பல ஆசிரியர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: சந்தேக நபர்கள் கைது | Exam Paper Leak Principal Teachers Arrested

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

மேலும், இந்த புகைப்படங்கள் அநுராதபுரம், நொச்சியாகம , கொழும்பு ஆகிய பல்வேறு பிரதேசங்களுக்குப் பகிரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்: சந்தேக நபர்கள் கைது | Exam Paper Leak Principal Teachers Arrested

இத்தகைய விடயங்களால் பரீட்சைகள் மீதான நம்பிக்கை இழக்கப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரீட்சை திணைக்களம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்