தெற்கு அதிவேகப் பாதையின் இரண்டு வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்ட பேருந்துகளின் சாரதிகள் இன்றைய தினம் (7) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடவத்தை- பாணந்துறை மற்றும் ஹொரணை-கடவத்தை ஆகிய வழித்தடங்களில் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகளே பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருந்துகளில் ஒரு பயணிக்கான கட்டணமாக 400 ரூபா அறவிடப்படுகின்றது.
பணிப்புறக்கணிப்பு
எனினும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலையிட்டு ஹொரணை-கடவத்தை வழித்தட பேருந்துக் கட்டணத்தை 330 ரூபாவாகவும், பாணந்துறை-கடவத்தை பேருந்துக் கட்டணத்தை 360 ரூபாவாகவும் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிராகவே பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதுடன், இது தொடர்பில் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சிக்கலுக்கு இன்னும் ஒரு வார காலத்துக்குள் தீர்வு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.