கலா ஓயா பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்பதற்காக இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளும் சிறப்பு மீட்பு நடவடிக்கை இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு படகுப் படையினர் பயணம்
இது குறித்து அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இதற்காக இலங்கை கடற்படையின் சிறப்பு பயிற்சிபெற்ற, சிறப்பு படகுப் படையினர், உடனடி நடவடிக்கைப் படையினர் மற்றும் கடற்படை சுழியோடிகள் குழுவினர் பங்கேற்கின்றனர்.

சிறப்பு படகுப் படையினர் combat Rubber Raiding craft(CRRC) படகுகளைப் பயன்படுத்தி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள இடத்தை நோக்கிப் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

