கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் கர்ப்பம் தரித்ததாக போலியான முறையில் வெளிப்படுத்தி, வீதியோரம் பிச்சையெடுத்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் நேற்று காலை பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்
கடந்த இரண்டு வருடங்களாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாணந்துறை பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பிச்சை எடுப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களாக அவர் கர்ப்பமான நிலையில் இருப்பதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்னவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பிச்சை எடுத்தல்
மக்களை தவறாக வழிநடத்துதல் மற்றும் பிச்சை எடுத்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் அவர் குற்றம் செய்துள்ளதாகவும், சந்தேகநபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான போலி கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் இருப்பதாகவும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.