யாழில் நேற்று முன்தினம்(18.10.2025) குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த
பொன்னம்பலம் கமலநாதன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனவிரக்தி அடைந்த நபர்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் மனைவி, பிள்ளைகளை பிரிந்த நிலையில் தனிமையில் வாசித்து
வந்துள்ளார்.
இதனால் மனவிரக்தி அடைந்த அவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு
உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.