யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர்
அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்றையதினம் (22.11.2024) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் நேற்று காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த
வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.
மாரடைப்பு
இந்நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு
சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டதோடு மாரடைப்பினால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.