துவிச்சக்கர வண்டி மோதிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வந்த நபர் ஒருவர் இன்றையதினம்(24) உயிரிழந்துள்ளார்.
இதன்போது மன்னார்(mannar) –
பேசாலை பகுதியைச் சேர்ந்த அன்ரனி பெனாட் லோகு (வயது – 57) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியால் வந்த துவிச்சக்கர வண்டி மோதியது
குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி வயலில் மாட்டினை மேயக் கட்டிவிட்டு வீதிக்கு
ஏறினார். இதன்போது வீதியால் வந்த துவிச்சக்கர வண்டி அவர் மீது மோதியது.
யாழ்.போதனாவில் சிகிச்சை
இந்த விபத்தில் காயமடைந்த அவர் பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 23ஆம் திகதி
அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(24) மதியம்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர்
மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.