முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி !

 யாழில் (Jaffna) விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (14) அவர் உயிரிழந்துள்ளார்.

சூரியவெளி – நாவாந்துறை
பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜோஜ் மதுசன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் மோதி விபத்து

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் கிளிநொச்சியில் (Kilinochchi) உள்ள தேவாலயம் ஒன்றில் பணி
செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 28 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு
தேவாலயத்துக்கு பணிசெய்ய சென்றுள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி ! | Family Member Dies In Accident In Jaffna

இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திரும்பி வந்துகொண்டிருந்த போது முன்னால் பயணித்த அரச பேருந்து ஒன்று புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அவர் குறித்த பேருந்தை முந்துவதற்கு முயற்சித்துள்ள நிலையில், எதிர் திசையில் வந்த பட்டா
ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மேலதிக விசாரணை

பின்னர் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் அவரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதி செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர் அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு,
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி ! | Family Member Dies In Accident In Jaffna

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண
விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்