தென்னாபிரிக்காவில் (South Africa) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு (Velupillai Prabhakaran) வீரவணக்க நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 16 ஆம் ஆண்டு நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தென்னாப்பிரிக்காவின் டெர்பன் (Durban) நகரில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திருவுருவப் படம்
தலைவர் பிரபாகரனின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரங்கின் அகல் விளக்குகளில் பார்வையாளர்களும், பொதுமக்களும் மற்றும் பங்கேற்றவர்களும் ஒளியேற்றியதுடன் மலரஞ்சலியும் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.