திருகோணமலையில் (Trincomalee) தனியார் கம்பெனியினருக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இடையில் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய
பகுதியில் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார்
கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு
விவசாயிகள் மற்றும் குறித்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையில்
வாக்கு வாதம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் நிறுவனங்கள்
குறித்த சம்பவ இடத்துக்கு இலங்கை துறை முக அதிகார சபையினர் உள்ளிட்டவர்களுடன்
திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள குழுவினரும் உள் நுழைந்துள்ளனர்.
இதனை தடுக்க சென்ற
விவசாயிகளை தனியார் நிறுவன ஊழியர்கள் தாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த முத்து நகர் பகுதியில் ஏற்கனவே மக்களின் விவசாய காணிகளை அபகரித்து
தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளனர்.
விவசாய காணி
இதையடுத்து, மேலும் அங்கு உள்ள விவசாய காணியில் திட்டத்தை ஆரம்பிக்க சென்ற
நிலையில் இக் கை கலப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த முத்து நகர் பகுதி விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாய காணியை
மீட்டுத்தரக்கோரிய பல போராட்டங்களை அண்மையில் முன்னெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் வேலை திட்டத்தை ஆரம்பிக்கபடாத காணிகளில் விவசாய செய்கை
மேற்கொள்ள முடியுமான நிலைக்கு ஒத்துழைப்பதாக திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள்
சக்தியின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் கூறியிருந்த போதிலும்
தற்போது அது சாத்தியமாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.