முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென வெட்டப்பட்ட வீதி ! அவதியுறும் விவசாயிகள்! அதிகாரிகள் அசமந்த போக்கு

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான
பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று
மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு
அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை
முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற
நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து
முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு
சிறிய பாதையை மட்டும் போட்டுவிட்டு குறித்த பாலம் அமைக்கும் பணி
இடம்பெறுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு சென்ற மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கச்சான் காணிகளுக்கு செல்கின்ற மக்கள் வயல்
நிலங்களுக்கு செல்கின்ற மக்கள் தங்களுடைய வயல் நிலங்கள் மற்றும் கச்சான்
காணிகளுக்கான மூலப் பொருட்கள் அல்லது முடிவு பொருட்களை கொண்டு செல்ல அல்லது
கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிறுபோக அறுவடை ஆரம்பித்து இருக்கின்ற நிலைமையில் நேற்று முதல்
அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் குறித்த அறுவடை நெல்லினை வீடுகளுக்கு
கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்குரிய மாற்றுப் பாதை அமைத்து தர
முடியாது என தெரிவித்திருக்கிறதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே
தமக்கு உடனடியாக அந்த பாலம் அமைக்கின்ற இடத்திலே அதற்கு அருகாக மாற்றுப்பாதை
ஒன்றை அமைத்து தங்களுடைய நெல்லுகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் தங்களுடைய
காணிகளுக்கு செல்வதற்கும் ஏற்ற வகையில் உளவு இயந்திரம் செல்லக்கூடிய வகையில்
பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய
விவசாய உள்ளீடுகளை உரிய வகையிலே தனது வீடுகளுக்கு கொண்டுவர முடியாமல்
அந்தரிப்பதாகவும் எனவே இதற்குரிய அதிகாரிகள் உடனடியாக இதற்குரிய பாதையை
அமைத்து தருமாறும் தங்களுக்கு அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டியது மிக
முக்கியமானது.

 ஆனால் அந்த பாலம் அமைக்கின்ற பணியினால் தங்களுடைய விவசாய
உற்பத்திகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாலத்தை அமைக்குமாறும்
ஆனால் அதற்கு அருகிலே மக்கள் சென்றுவரக்கூடிய பாதையை அமைத்து தருமாறும் மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பாதைகளில் கட்டுமான பணிகள் செய்கின்ற போது அதற்கு மாற்று பாதையை
ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பாதை கட்டுமானம் செய்கின்றவர்களுடைய பொறுப்பாக
காணப்படுகின்ற நிலைமையில் அவ்வாறு செய்யப்படாமல் இந்த வேலை ஏன்
செய்யப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.