Courtesy: Kantalai yoosuf
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒரு சில விவசாயிகளுடன் சேர்ந்து தற்போதைய அரசாங்கத்திற்கு சேறு
பூச நினைப்பதாக விவசாய சம்மேளனத்தின் தலைவர் இந்திக பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கந்தளாய், சேருவில, வான் எல , மற்றும் தம்பலகாமம் போன்ற பகுதிகளில் வேளாண்மை அறுவடை இன்னும்
முழுமையாக ஆரம்பிக்கவில்லை.
அரிசியின் விலை
வழங்கப்படும் அரிசியின் விலை, மில்லியன் கணக்கான நுகர்வோரை பாதுகாக்க அரிசியின் விலையை
கட்டுப்படுத்த போதுமானதை விட அதிகமாக உள்ளது.
புதிய அரசாங்கத்தினால் விவசாயிக்கு இலவச உரம் வழங்கப்பட்டது.
யூரியாவின் விலை 15,000 லிருந்து 8,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உர மானியம் 15,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தப்பட்டது.
அரசாங்கத்தின் நெல் சேமிப்புக்கு களஞ்சியசாலை தற்போது தயாரான நிலையில் உள்ளதோடு கந்தளாய் நெல்
சேமித்து வைக்க 2800 மெட்ரிக் டொன் கொள்ளளவு களஞ்சிய படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்” என்றார்.