முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் – சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath fonseka) தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் எங்களுக்கு சீனாவிலிருந்து தோட்டாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்ட பிறகு எங்களிடம் பீரங்கி
தோட்டாக்கள் தீர்ந்துவிட்டது.

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு

நிலைமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம்
தெரிவித்தோம். 
அதற்கு அவர் சீனாவிலிருந்து தோட்டாக்களை கடனாகவே இறக்குமதி செய்கிறோம்.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் - சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா | Field Marshal Sarath Fonseka Revel Ltte Leader

எனவே அவர்கள் அவற்றை அனுப்பவில்லை என்றால் எங்களுக்கு ஒன்றும்
செய்ய முடியாது என்றார். 

அதன் பிறகு பசில் ராஜபக்ச உடன் கலந்துரையாடல்களுக்குப் பிறகு அவர் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பீ.பி ஜயசுந்தரவுக்கு சொன்னார்.

ஒரு தேவையொன்று உள்ளது, உடனடியாக இராணுவத் தளபதிக்கு 100 மில்லியன் டொலரை வழங்குமாறு கூறினார்.
 5 நிமிடத்தில் அவர் அதனைச் செய்தார்.

தேசதுரோக செயல் 

அதன் பிறகு ஒரு மணி நேரம் வரையில் ஒரு நட்பு ரீதியான கலந்துரையாடல் பசிலுடன் இடம்பெற்றது. 
2005 ஆம் ஆண்டில் வடக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு புலிகள் அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக பசில் ராஜபபக்ச ஒப்புக்கொண்டார்.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் - சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா | Field Marshal Sarath Fonseka Revel Ltte Leader

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதை அவர்கள்
உறுதி செய்ததோடு அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டுமென கேட்க கடற்புலிகள் பயன்படுத்தும் டோரா வகை படகுகளுக்காக மலேசியாவுக்கு பணம் வழங்க வேண்டுமெனவும் அதற்காக 2 மில்லியன் வழங்குமாறும் கோரியுள்ளனர். 

அதற்கமைய அந்த அமைப்புக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
அது வெளிநாடு ஒன்றில் வைத்து வழங்கப்பட்டது. அந்த நாடு எது என்பதை
நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

அதிலிருந்து தாக்குதல் படகுகள் வந்து எங்களை தாக்கின. ஏராளமான கடற்படை வீரர்கள் இறந்தனர் இவர்கள் செய்தது தேசதுரோக செயல் இல்லையா? 
மகிந்த ராஜபபக்சவின் மகன் கடற்படையில் பணியாற்றிய போதிலும் அவர் கடலுக்கு சென்று யுத்தம் புரியவில்லை என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.