ஜப்பானிய (Japan) வாகன இறக்குமதியில் சுமார் 20 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகரகம (Maharagama) பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாகனங்களை இறக்குமதி
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 18 வாகனங்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அதன் மூலம் அந்தப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு மொத்தம் 68 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

