கண்டி (Kandy) அக்குரணையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போது, அப்பகுதியில் நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கண்டி மாநகர சபையின் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தீ பரவல்
அதேவேளை, தீ பரவியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

