திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் (T/Jamaliya Muslim Maha Vidyalaya) பின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து விரைவாக அணைக்கப்பட்டு பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (13) பரவிய தீயானது சிறிது நேரத்தில் திருகோணமலை (Trincomalee) நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட குப்பை, குளங்களுக்கு தீ வைத்த போது அந்த தீயானது அதிகமாக பரவி சுடர் விட்டு எரிந்து உள்ளது.

இந்நிலையில் பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்ததோடு திருகோணமலை
நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் பெரிய சேதங்கள் ஏற்படாத வகையில்
தீப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

