கொழும்பு- தெமட்டகொடை குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெமட்டகொடை இறைச்சி மடுவம் (மஸ் மடுவ) என்று அழைக்கப்படும் பகுதியில் வேலுவனா கல்லூரிக்கு அருகிலுள்ள குப்பை மேட்டிலே இன்று(13) அதிகாலை 1:30 மணியளவில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவல்
இந்தநிலையில், கொழும்பு மாநகர தீயணைப்புப் படையினர் உடனடியாக செயற்பட்டு தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மேலும், குப்பை மேட்டுக்கு விசமிகளால் தீ வைத்திருக்கலாம் என தீயணைப்பு படையினர் சந்தேகம் கொள்கின்றனர்.

