முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.வடமராட்சியில் உள்ள மரக்காலையில் தீ விபத்து!

யாழ்ப்பாணம்- வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி சாமியன் அரசடி பகுதியில்
அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தானது இன்று (3) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னொழுக்கின் காரணமாகவே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து

இந்தநிலையில், கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் மற்றும் உத்தியோகத்தர்கள்
அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து உடனடியாக செயற்பட்டு தீயைக் கட்டுக்குள்
கொண்டு வந்துள்ளனர்.

யாழ்.வடமராட்சியில் உள்ள மரக்காலையில் தீ விபத்து! | Fire Breaks Out At Vadamarachchi Lumber Mill

இதன்போது, கதவுகள், நிலைகள்
உள்ளிட்ட சில மரம் சார்ந்த பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும்
உடனடியாக செயற்பட்டமையால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள்,
மரப்பலகைகள் போன்றவற்றுக்கு தீப்பரவல் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்துள்ளது.

மின்சாரப் பாவனை

இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன் கருத்து தெரிவிக்கையில், மரக்காலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு
இன்று மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்த போது வருமான வரி உத்தியோகத்தர்கள்,
சாரதிகள், பாதுகாப்பு உத்தியோகத்தருடன் தண்ணீர் தாங்கி பவுசருடன் சென்று
உடனடியாக செயற்பட்டதால் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரக் கூடியதாக
இருந்தது.

யாழ்.வடமராட்சியில் உள்ள மரக்காலையில் தீ விபத்து! | Fire Breaks Out At Vadamarachchi Lumber Mill

அப்பகுதி பொதுமக்களும் உடனடியாகவே மரக்காலை ஊழியர்களுடன் இணைந்து
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை பாராட்டுக்குரியது.

நெல்லியடி
பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் இடம்பெற்ற இரண்டாவது தீவிபத்து
இதுவாகும்.

இரண்டுமே மின்னொழுக்கின் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிய
வருகிறது. ஆகவே மின்சாரப்பாவனையுள்ள தொழில் சார்ந்த நிறுவனங்களை நடத்துவோர்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.