நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார்(Myanmar) மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முப்படைகளின் உறுப்பினர்களுடன் முதல் சிறப்பு விமானம் மியன்மாருக்குப் புறப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இன்றையதினம் (05) புறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிவாரணக் குழு
மருத்துவக் குழு, மீட்புக் குழு மற்றும் நிவாரணக் குழு ஆகியவை அவர்களில் இடம்பெற்றுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரித்துவ மகா நாயக்கர்களின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உதவிகளையும் இந்த விமானம் எடுத்துச் சென்றுள்ளது.

