முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய புதிய கடற்தொழில் அமைச்சர்

வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையிலான
சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா
தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எதிர்நோக்கும் பிரச்சினைகள் 

கலந்துரையாடலில் அண்மையில் புதிதாக கடற்தொழில் அமைச்சராக பதவியேற்றிருக்கும் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) கலந்து கொண்டிருந்தார் .

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய புதிய கடற்தொழில் அமைச்சர் | Fisheries Minister Meets Northern Fishermen

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டு கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இதன் போது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை படிப்படியாக தான் முன்னெடுப்பதாக  மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கு கடற்தொழில்
அமைச்சர் உறுதி அளித்தார்.

நேரில் விஜயம் 

இதேவேளை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம்  நேரில் விஜயம்
மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , வைத்தியசாலையின்
சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

வடமாகாண மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய புதிய கடற்தொழில் அமைச்சர் | Fisheries Minister Meets Northern Fishermen

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில்
விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய
சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த
அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால்
முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா
வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை
மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.