முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(29) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை அமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடி
முற்றாக தடைசெய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
விசேட செயற்றிட்டம்
சட்டவிரோத கடற்றெழிலை தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டம் ஒன்று
நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்ட நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சட்ட விரோத கடற்றொழிலை தடைசெய்யக் கோரி போராட்டம் செய்ததுடன் மாவட்ட அசாங்க அதிபரை சந்தித்து மனுவும் கையளித்திருந்தனர்.
சந்திப்பு
இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரை மாவட்ட
செயலகத்திற்கு வரவழைத்து கடற்றொழிலாளர்களுடன் விசேட சந்திப்பினை
மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி
அமைச்சருமான உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
திலகநாதன்,ஜெகதீஸ்வரன், ரவிகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட கடற்றொழில் நீரியல்
வளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் சமாசங்களின் உறுப்பினர்கள், கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர்கள் முதலானோர்
கலந்து கொண்டனர்.