முல்லைதீவு செல்வபுரம் பகுதியில்
கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த
தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்கள் எரிந்து
நாசமாகியுள்ளதுடன் கரையோரப் பகுதியில் உள்ள கடற்றொழிலாளி ஒருவரின் வாடி முற்று
முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த கடற்படை முகாமில்
குப்பைக்கு தீ வைத்துள்ளார்கள்.
கடற்கரையில் நின்ற இளைஞர்கள்
இந்த தீயானது பரவி கடற்படை முகாமில் நின்ற பனை
மரங்களில் பரவி உள்ளதுடன் தீ காற்றில் பரவி கடற்கரையில் வாடியமைத்து தொழில்
செய்து வந்த ஒருவரின் வாடி மீது விழுந்த நிலையில், வாடி முற்று முழுதாக எரிந்துள்ளது.
அதில் பெறுமதியான பல பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பரவிய தீ கடற்கரை பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் அமைத்த கொட்டில்களிலும் பரவியுள்ளது.
சம்பவம் அறிந்து செல்வபுரம் கடற்கரையில் நின்ற
இளைஞர்கள் தீவிரமாக செயற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்துள்ளார்கள்.
இந்த தீ விபத்தில் வாடி முற்று முழுதாக எரிவடைந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
அதேவேளை இந்த தீ விபத்தில்
எரிகாயங்களுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிபத்தில் எரிந்து சாம்பலாகிய வாடியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





