காட்டு யானை தாக்கி கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(10) மாத்தறை, கிரிந்த, அதகலவெல்ல பகுதியில்
இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை
திஸ்ஸமஹாராமை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கடற்தொழிலாளரே உயிரிழந்துள்ளார்.
இவர் கடற்தொழிலுக்காக மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து கிரிந்த
துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியில் இருந்த காட்டு யானை
தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.