முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு கடலில் மாயமாகிய கடற்றொழிலாளர் தொடர்பில் வெளியான தகவல்

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மாயமாகிய நிலையில் இரண்டாவது நாளாக தேடும் பணியில், ஒரு தொகுதி வலைகள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் கடற்தொழிலுக்கு சென்றவேளை படகு ஒன்று நடு கடலில் தனியாக யாருமற்ற நிலையில் மிதந்து வந்துள்ளது.

இந்நிலையில் படகில் குறித்த நபரின் சறம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தகறையும் காணப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளரின் உறவினர்கள்

அதனையடுத்து தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளரின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு கடலில் மாயமாகிய கடற்றொழிலாளர் தொடர்பில் வெளியான தகவல் | Fisherman Who Disappeared Mullaitivu Sea

இந்நிலையில் குறித்த கடற்றொழிலாளரை 8 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கடற்றொழிலாளர் தாெடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று (20) அதிகாலை 30ற்கு மேற்பட்ட படகுகளில் பிற்பகல் 2.30 மட்டும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இத்தேடுதல் நடவடிக்கையில் காணாமல் போன கடற்றொழிலாளரின் ஒருதொகுதி வலை மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படகில் காணப்பட்ட இரத்தக்கறையினை தடயவியல் பொலிஸார் பரிசோதனை செய்து அந்த
இரத்தம் மனித இரத்தம் என உறுதிப்படுத்தி உள்ளதாக காணாமல் போன கடற்றொழிலாளரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத வலை

முல்லைத்தீவு கடலில் கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில்
ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் மாயமாகிய கடற்றொழிலாளர் தொடர்பில் வெளியான தகவல் | Fisherman Who Disappeared Mullaitivu Sea

அவர்களுக்கும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தும்
கடற்றொழிலாளர்களுக்கும் இடையே கடந்த காலங்களில் பிரச்சினைகள் இடம்பெற்று வந்துள்ளது.,

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துபவர்களை தடைசெய்து அவர்களை கைதுசெய்யகோரி ஏனை
கடற்றொழிலாளர்கள் பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள்
நடத்தியும் திணைக்கள அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் வந்துள்ளார்கள்.

இந்த சிக்கலான சூழ்நிலையில், மேற்கண்ட கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட
வலைகளைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர் களால் காணாமல் போன கடற்றொழிலாளர் பாதிக்கப்பட்டிருக்கலாம் ஏனைய அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.