தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகரில் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியே இன்றையதினம் (10.12.2024) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
பலரும் கலந்துகொண்ட போராட்டம்
மேலும், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர்.ல ஹேர்மன் குமார மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் – சதீஷ்