Courtesy: thiyaku subramaniyam
நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் பொரகஸ் சந்தியில் ரேந்தபொல அம்பேவலை பாதையில்; நேற்று (29.11.2025) இரவு 10.45 மணியளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்போது வீட்டில் இருந்த ஐவரும் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த 3 பேரும் மண்ணில் புதையுன்டனர்.
குறித்த பகுதியில் இன்றையதினம் காலை முதல் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை ஆரம்பித்தனர்.இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் சடலங்களும் வர்த்தக நிலையத்தில் புதையுன்டிருந்த இரண்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது.ஒருவரின் சடலம் அதாவது வர்த்தக நிலையத்தில் புதையுண்டவரின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மீட்கப்பட்ட சடலங்கள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையார் உட்பட 4 பிள்ளைகளின் சடலங்களும் பாதினாவலை பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ளது.ஏனைய இருவரின் சடலங்களும் ரேந்தபொல பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் சுமார் 2.30 மணியளவில் தமது மீட்பு பணிகளை நிறைவு செய்தனர்.இந்த பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.எந்த காரணம் கொண்டும் குறித்த பாதையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
மண்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சம்
இன்னும் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.அதே நேரம் நுவரெலியா பதுளை பாதையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.இந்த பாதையின் பல இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பாதை மூடப்பட்டுள்ளது.


