முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த ரணில் உட்பட முக்கிய அரசியல்வாதிகள்

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்து விநியோகம் செய்தமை தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உட்பட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகவில்லை என நேற்று வெள்ளிக்கிழமை (29) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக 18 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம(Lochani Abeywickrama) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலம் வழங்கத்தவறிய அரசியல்வாதிகள்

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம(Lakmini Girihagama), முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena)மற்றும் முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ்(tiran alles), சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) மற்றும் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) ஆகியோர் இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை என நீதிமன்றில் அறிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த ரணில் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் | Five Politicians Yet To Provide Statements

மேலும் 15 முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை மாஜிஸ்திரேட் மீண்டும் வலியுறுத்தினார்.

ரம்புக்வெல உட்பட 12 பேர் முன்னிலை

இந்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். முதலாவது சந்தேக நபரான ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுகத் ஜனக பெர்னாண்டோ, போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர், சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த ரணில் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் | Five Politicians Yet To Provide Statements

பெர்னாண்டோவின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். மீதமுள்ள 11 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டு 2025 பெப்ரவரி 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.