அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட உள்ள 50 இலட்சத்தில் அழகான வீடு கட்டலாம் என கட்டடக்கலை மற்றும் நிர்மாணத்துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வரலாற்றிலே எந்தவொரு அரசாங்கமும் செய்யாத செயலை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிதியை வைத்து எப்படியான வீட்டைக் கட்டலாம் என்ற திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மலையகத்திலும் சரி வேறு இடத்திலும் சரி வீட்டை நிர்மாணிக்க உள்ளோருக்கு தாம் இலவசமான வீட்டு வரைபட திட்டமிடல் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

