முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறையின் அனர்த்த நிலை குறித்து ஆராய பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை (Ampara) மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekara) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மாவட்டத்தின் வெள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும் தற்போது நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேற்று (28) விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை அம்பாறை மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலைய (DMC) அதிகாரிகள், சிரேஷ்ட அரச மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

நிவாரண நடவடிக்கை

இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் மேலும் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான திட்டமிடப்பட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அம்பாறையின் அனர்த்த நிலை குறித்து ஆராய பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம் | Floods In Ampara Aruna Jayasekara Visit

அனர்த்தத்தின் பரிமாணம், உயிர் இழப்புகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மாவட்டத்தில் நிவாரண நடவடிக்கைகளின் போது முகங்கொடுக்கப்படும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து பிரதி அமைச்சருக்கு DMC அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், தடையில்லா அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்யவும், பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கவும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டோர் 

அனர்த்த தடுப்பு, பொது பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான நலன்புரி ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அம்பாறையின் அனர்த்த நிலை குறித்து ஆராய பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம் | Floods In Ampara Aruna Jayasekara Visit

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவத் தளபதி, மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், DMC பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதியமைச்சர் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் குறித்து நேரில் கேட்டறிந்து அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.