முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் தொடரும் அசாதாரண நிலை : முன்னெடுக்கப்பட்ட அவசர கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் (Mannar) மாவட்டமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வருகின்றமையால் இதுவரை 14,237 குடும்பங்களைச் சேர்ந்த 49,560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் சுமார் 2,100 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர கலந்துரையாடல்

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர (Aruna Jayasekara) தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (27) காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மன்னாரில் தொடரும் அசாதாரண நிலை : முன்னெடுக்கப்பட்ட அவசர கலந்துரையாடல் | Floods In Mannar Defense Deputy Minister Discuss

இதன் போது வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் (N. Vethanayagan), இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும்
லியனகே, கடற்படையினர், காவல்துறை உயர் அதிகாரிகள்,  திணைக்கள
தலைவர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கை
குறித்து ஆராயப்பட்டதுடன் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தம் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில்
ஆராயப்பட்டது.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை

தொடர்ந்தும் மழைபெய்து வருகின்றமையினாலும் அநுராதபுரம் மற்றும்
மல்வத்து ஓயாவில் இருந்து கூடுதலான நீர் வெளியேறுகின்றமையினால்
மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் தொடரும் அசாதாரண நிலை : முன்னெடுக்கப்பட்ட அவசர கலந்துரையாடல் | Floods In Mannar Defense Deputy Minister Discuss

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது குறித்தும்
கலந்துரையாடப்பட்டது.

எனவே சகல திணைக்களங்களும், முப்படையினரும் இணைந்து தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.