பெண் பொலிஸ் அதிகாரியொருவரின் புகைப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மிரிஹானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரியாக வருணி கேஷலா போகஹவத்த செயற்படுகின்றார்.
பிரதான பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டரான இவர் அண்மையில் மாத்தறையில் இருந்து மிரிஹானைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
மர்ம நபர் அச்சுறுத்தும்
இந்நிலையில், தற்போதைக்கு சுகவீனம் காரணமாக நாரஹேன்பிட்டை பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் அவர் அலுவலகத்தில் இல்லாத நேரத்தில் அவருடைய அலுவலகத்துக்கு வருகை தந்த மர்ம நபரொருவர் அங்கிருந்த வருணியின் ப்ரேம் செய்யப்பட்ட புகைப்படத்துக்கு மலர்மாலை அணிவித்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் வருணியை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய தற்போதைக்கு தீவிர பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.