றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் உணவுத் திருவிழாவானது வியாபாரத்தை தாண்டி தமிழர்களினுடைய உணர்வு சம்பந்தமான விடயமாக தாம் கருதுவதாக அதன் தலைவர் பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) தெரிவித்துள்ளார்.
அத்தோடு என்றோ ஒரு நாள் எமது உணவுத் திருவிழானது பாரம்பரிய உணவுத் திருவிழாவாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உணவு திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
நேற்றையதினம்(5) ஆரம்பமான குறித்த உணவுத் திருவிழா எதிர்வரும்(7) ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

