ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் ஆகியவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (29) நள்ளிரவு முதல் குறித்த உணவுகளின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் இன்று (29)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார்.
உணவுகள் விலைக்குறைப்பு
அத்துடன் சமீப காலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்காத உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனினும், வெதுப்பகப் பொருட்களின் விலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.