முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்து ஆசன முன்பதிவு: தொடருந்து நிலையங்களில் பதிவாகும் குழப்ப நிலை

கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து நானுஓயா வழியாக பதுளை செல்லும் தொடருந்து
அனைத்திலும் சுற்றுலா
பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு
இலக்கத்தை உள்ளீடு செய்யாது ஆசன முன்பதிவு செய்தமையால் சுற்றுலா பயணிகள் தொடருந்தில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ச்சியாக புறக்கணிப்படுவதாக
சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனால் நானுஓயா தொடருந்து நிலையத்தில் எல்ல நோக்கி பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இன்று (15) மதியம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெற்று ஆசனங்களுடன் பயணிக்கும் தொடருந்து

இதனால் பெரும்பாலான வெற்று ஆசனங்களுடன் தொடருந்து பயணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் தொடருந்து நிலைய
பிரதான அதிபர் உட்பட தொடருந்து நிலைய அதிகாரிகளுடன்
சுற்றுலா வழிகாட்டிகளும் சுற்றுலா பயணிகளும் முரண்பட்ட பின்னர் அங்கு
அமைதியின்மையும் ஏற்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முன்பதிவின் போது கட்டாயமாக்கப்பட்டுள்ள விடயம்

தொடருந்து ஆசன முன் பதிவினை செய்து டிக்கட்டுக்களை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும்
மோசடி
நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவித்து, தொடருந்து ஆசனங்களை
முன்பதிவு
செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு
கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை தொடருந்து திணைக்களம்
அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து அடிக்கடி குழப்பகரமான சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.