ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடுகள் இல்லாததை கண்டு வளர்ந்த நாடுகள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
புதிய வேலை வாய்ப்புகள்
இதனால், குறித்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முன்வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.