காலி – வராஹேன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்வத்தில் 83 வயதான ஜேர்மன் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

