முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பயிர் நிலங்களை சேதப்படுத்தும் வனவளத் திணைக்களம்! வவுனியா மக்கள் கவலை

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை
வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம்
நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்த போது, நாங்கள் பூர்வீகமாக குறித்த காணிகளில் பயிர்செய்து வந்த நிலையில் கடந்த 1987
ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட போரினால் இடம்பெயர்ந்திருந்தோம்.

பூர்வீக காணிகளை மீளவும் பெற

மீண்டும் 2012 ஆம் ஆண்டு
மீள் குடியமர்த்தப்பட்டதுடன் எமது காணிகளில் நெற் பயிர்செய்கைகளில் ஈடுபட்டு
வருகின்றோம்.

பயிர் நிலங்களை சேதப்படுத்தும் வனவளத் திணைக்களம்! வவுனியா மக்கள் கவலை | Forest Department Damaging Crop Lands

தற்போது 13 ஆண்டுகளின் பின் வனவள பிரிவு உத்தியோகத்தர்கள் எமது காணிகளை
கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு விதைக்கப்பட்டுள்ள
பயிர்களை அழித்து தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது உழவு இயந்திரங்களை விவசாய பயிர்களுக்கு மேலாக ஓட்டிச்சென்று பயிர்களை
சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிக்கான ஆவணங்களை வழங்க அரசாங்கத்தால் பதிவு செய்ததற்கான ஆவணமும்
எங்களிடம் இருக்கிறது.

எனவே வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி எமது பூர்வீக
காணிகளை மீளவும் பெற்றுத் தருமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக
தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மனு ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்